Aran Sei

ஆபத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் – ஐபிஐ அறிக்கை

டகவியலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை அரசு முறையாக விசாரிக்கத் தவறுவதால், அந்தக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேசப் பத்திரிகை நிறுவனம் (ஐபிஐ) தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, வியன்னாவைச் சேர்ந்த ஐபிஐ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், `2019 அக்டோபர் முதல் இந்தியாவில் இரண்டு பேர் உட்பட 52 பத்திரிகையாளர்கள் அவர்களின் பத்திரிகை வேலை காரணமாக இறந்துள்ளனர். அவர்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று ஐபிஐ-யின் `டெத் வாட்ச்’ என்ற இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சத்தீஸ்கர் – கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் காங்கிரஸ் – பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

`மேலும் 15 வழக்குகள், ஊடகவியலாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், அவ்வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளதால், அதன் நோக்கம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிரியாவில் ஏழு பத்திரிகையாளர்களும் ஈராக்கில் ஆயுத மோதலை அம்பலப்படுத்திய ஒருவரும் கொல்லப்பட்டனர். ஈராக்கில் இருவர், ஆப்கானிஸ்தானில் ஒருவரும் உள்நாட்டுக் கலவரங்கள் குறித்துச் செய்தி வெளியிட்டதால் கொல்லப்பட்டனர். மேலும்  இரண்டு பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்தபோது கொல்லப்பட்டனர்.’ என்று ஐபிஐ அறிக்கை கூறியுள்ளது.

`ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படாததால், பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன” என்று ஐபிஐ துணை இயக்குநர் ஸ்காட் கிரிஃபென் கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் கௌரி லங்கேஷ்ன் குடும்பம்

சென்ற ஆண்டைப் போலவே அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் நடந்திருக்கின்றன. மெக்ஸிகோவில் எட்டுக் கொலைகள், ஹோண்டுராஸில் ஐந்து கொலைகள், கொலம்பியா மற்றும் வெனிசுலாவில் தலா இரண்டு கொலைகள் மற்றும் பிரேசில், குவாத்தமாலா, ஹைட்டி மற்றும் பராகுவேயில் தலா ஒரு கொலையும் நடந்துள்ளன. ஆசியாவில் கொலை செய்யப்பட்ட 11 பத்திரிகையாளர்களில் மூன்று பேர் பிலிப்பைன்ஸிலும், தலா இரண்டு பேர் இந்தியாவிலும், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானிலும் தலா ஒருவர், கம்போடியா மற்றும் பங்களாதேஷிலும் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் இரண்டு பத்திரிகையாளர்களும், ஆப்பிரிக்காவில் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சோமாலியாவில் தலா ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பட்டியலிட்டுள்ளது.

`ஏமனில் ஒரு பத்திரிகையாளர் மேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளார். ஈராக்கில் ஒருவர், அவரது காரில் இறந்துகிடந்தார். அதே நேரத்தில் கத்தாரில், சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது” என்று ஐபிஐ தெரிவித்துள்ளது.

வழக்குகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடும்போது, மெக்ஸிகோவில் நடந்த எட்டுக் கொலைகளில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரேசில், கொலம்பியா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இடங்களில் தண்டிக்கப்படாத குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் ஐபிஐ தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் கம்போடியாவில் நடந்த கொலைகள் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் நடந்த ஏழு வழக்குகளில் யாரும் இதுவரை  கைது செய்யப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்