Aran Sei

சத்தீஸ்கர் – கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் காங்கிரஸ் – பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

credit : scroll.in

மீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு இருபதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கான்கர் மாவட்ட நகராட்சி அலுவலர்களால் சதீஷ் யாதவ் என்ற பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை அடுத்து பும்கல் இதழின் ஆசிரியர் கமல் சுக்லா அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

“நாங்கள் தாக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு நீதி கேட்க சென்றதால் அந்த பகுதி அரசியல்வாதிகள் எங்களை திட்டமிட்டு தாக்கினர்” என்று தி வயர் இணையதளத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.

“ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பரவிய தாக்குதல் செய்தி அவர்களை கோபமடைய செய்திருந்தது. எனவே காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த உடனே எங்களை தாக்கினர்” என்று கூறியுள்ளார்.

சுக்லாவை தொடர்ந்து ஜிவந்த் ஹல்தர் என்பவரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் முதல்வருக்கு நேற்று எழுதிய கடிதத்தில், “காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன் கருத்து சுதந்திரதையும், பேச்சு சுதந்திரத்தையும், பாதுகாக்கும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது வெட்ககேடானது” என்று கூறியுள்ளனர்.

“சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு தமது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காததால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தபடுவதும் தாக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது” என்று அந்த கடிதத்தில் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்