Aran Sei

ரிபப்ளிக் டிவி டிஆர்பி முறைகேடு – விசாரணைக்கு உதவத் தயார் என ‘பார்க்’ அறிவிப்பு

Image Credits: Sabrang India

“ஊடுருவலை எதிர்ப்பதற்கு” டிஆர்பி முறையைத் திரிக்கும் தனிநபர் (கள்) மீது கவனம் செலுத்துவதாக நேயர்களுக்கான ஒளிபரப்பு ஆய்வுக் குழு (பிஏஆர்சி இந்தியா) தெரிவித்துள்ளது.

“தொலைக்காட்சி சேனல்கள் ஒரு சுத்தமான மற்றும் வெளிப்படையான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிக்க உடன்பாட்டுடன் உள்ளன என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று பிஏஆர்சி அதன் தற்போதைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மும்பையில் இயங்கிவரக்கூடிய ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சி, பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்த மும்பைக் காவல்துறை இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்து விசாரித்தது.

அதை தொடர்ந்து, அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்திச் சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவதை 12 வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக பிஏஆர்சி கூறியது.

“கடந்த பல நாட்களாக, தொலைக்காட்சி மதிப்பீடுகள் மற்றும் பிஏஆர்சி இந்தியா குறித்து பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பிஏஆர்சி இந்தியா ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழில்துறை அமைப்பாக உள்ளது. வெளிப்படையான, துல்லியமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய டிவி பார்வையாளர்களின் அளவீட்டு முறையை பிஏஆர்சி இந்தியா சொந்தமாக நிர்வகிக்கிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட அமலாக்க முகமையின் தற்போதைய விசாரணைக்கு இது தேவையான உதவிகளை வழங்குவதாகக் கூறியுள்ளது. இதனை, “உண்மைகளை சிதைக்க வழிவகுக்கும் குறிப்பிட்ட சேனல்களின் தனிப்பட்ட நிகழ்வுகளிலிருந்து பார்ப்பதை விட, குழுவின் பெரிய ஸ்திரத்தன்மையின் வெளிச்சத்திலும், சுய கட்டுப்பாடுகளின் நலன்களை பொறுத்தியும் காண வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வாரியம் மற்றும் பல்வேறு குழுக்களின் முழு நம்பிக்கையுடனும் ஆதரவுடனும் பிஏஆர்சி-ன் நிர்வாகக் குழு செயல்படுகிறது. பிஏஆர்சி தொடர்ந்து ஒரே ஒரு குறிக்கோளால் இயக்கப்படுகிறது: அதன் சந்தாதாரர்கள் நம்பியிருக்கும், அறிவியலில் ஆழமாக வேரூன்றியுள்ள மதிப்பீடுகளை உருவாக்குவது, மிகப் பெரிய பொறுப்புணர்வுடன் அறிக்கையிடுதல் மற்றும் ‘இந்தியா எதை காண்கிறது’ என்பதை உண்மையாகப் பிரதிபலிப்பது,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போலி டிஆர்பி ஊழலில் சேனலுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்-ஐ  ரத்து செய்யக் கோரி ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியை நிர்வகிக்கும் ஏஆர்ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான உத்தரவையும் இவர்களின் மனு கோரியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்