Aran Sei

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வன்முறை தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

த்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 3 மாலை 6.45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்துள்ளார். அலுவலகத்தில் உள்ள பெரிய தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறி அலுவலகத்தின் அலங்கார கண்ணாடிகள் உள்ளிட்ட அனைத்தையும் கையில் இருந்த பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி உள்ளார். அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

அச்சடித்தபிறகே விற்கிறோம்; எங்களை விற்றுவிட்டு பத்திரிகையை அச்சடிப்பதில்லை – டைனிக் பாஸ்கர் நாளிதழின் புதிய விளம்பரம்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் நடுநிலையாக செய்திகளை தந்து அனைத்து மக்களையும் கவரந்த தொலைக்காட்சியாக சத்தியம் தொலைக்காட்சி விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டம் ஒழுங்கை சிதைக்கும் வண்ணம் அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் இந்த செயல் நடைபெற்றிருப்பதாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்துமீறி வன்முறையில் ஈடுபட்ட குஜராத் பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த நபருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் தீவிரமாக விசாரித்து அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். துரிதகதியில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் கைது செய்யப்படுவதால் மேற்கொண்டு இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பாதுகாக்க முடியும்.” என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வலியுறுத்தியுள்ளார்.

 

உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் – தி வயர் செய்தி நிறுவனம் வெளியீடு

வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி  சத்தியம் தொலைக்காட்சிக்கும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட மாநிலங்களில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது நிகழும் இதுபோன்ற தாக்குதல்கள் இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு இத்தகைய செயல்களை துவக்கத்திலேயே இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்புலத்தில் உள்ள தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது வன்முறை தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

இதுகுறித்து, அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே, பத்திரிகை சுதந்திரத்திற்கு நாடு முழுவதும் அச்சுறுத்தல் நிலவும் சூழ்நிலையில், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், மேலும் கவலையளிக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய செயல்களை தொடக்கத்திலேயே தடுக்கும் வகையில், தாக்குதலில் ஈடுபட்டவர் மீது  உடனடியாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு, ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொள்கிறோம் என்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில், பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்