Aran Sei

டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்

Image credit - hindustantimes.com

ர்னாப் கோஸ்வாமி, பார்க் முன்னாள் தலைமை அலுவலர் தாஸ் குப்தாவுக்கு, டிஆர்பியில் மோசடி செய்வதற்காக பணம் கொடுத்தார் என்று மும்பை போலீஸ் கூறியுள்ளது.

ஒளிபரப்பு மற்றும் பார்வையாளர்கள் ஆய்வு கழகம் (பார்க்) நிறுவனத்தின் முன்னாள் தலைமை அலுவலரான தாஸ் குப்தா டிசம்பர் 24-ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்டார் என்றும், அவர் டிசம்பர் 28 வரை போலீஸ் பாதுகாவலுக்கு அனுப்பப்பட்டிருந்தார் என்றும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

நேற்று தாஸ்குப்தாவை தொடர்ந்து விசாரிப்பதற்காக, போலீஸ் பாதுகாவலை இன்னும் இரண்டு நாட்கள் நீட்டித்து மும்பை போலீஸ் பெற்றிருக்கிறது.

பார்க் நிறுவனம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்த போலீஸ், தாஸ் குப்தாவை அங்கு அழைத்துச் சென்று, தொலைக்காட்சி சேனல்களின் தரவரிசையை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்வதற்கு இதை இயக்கும் விதி எவ்வாறு திருத்தப்பட்டது என்பதைப் பற்றி விவசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.

‘டி.ஆர்.பி மோசடி’ ரிபப்ளிக் டிவி நிர்வாகிகள் மீது மேலும் ஒரு வழக்கு – மும்பை போலீஸ் அதிரடி

டிஆர்பி மோசடியின் மூளையாக செயல்பட்டவர் தாஸ்குப்தா என்றும் மும்பை போலீஸ் கூறுகிறது. அந்த மோசடியில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தரவரிசை குறைக்கப்பட்டு, ரிபப்ளிக் டிவியின் தரவரிசை உயர்த்தப்பட்டதாக சொல்லப்படுவதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது. இந்த தரவரிசை மோசடி 44 வாரங்கள் நடந்திருக்கின்றது.

தாஸ்குப்தா பார்க் நிறுவனத்தின் தலைமை அலுவலராக இருந்த போது பயன்படுத்திய மடிக்கணினியையும் கைப்பற்றி அவரது மின்னஞ்சல்களை ஆய்வு செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தாஸ்குப்தாவுக்கு பல லட்சம் ரூபாய் பல தவணைகளாக கொடுத்துள்ளார் என்றும் போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு பதிலாக, தாஸ்குப்தா ரிபப்ளிக் டிவி செய்தி சேனலுக்கான தரவரிசையை அதிகரிக்க வேண்டும் என்று போலீஸ் தனது நீதிமன்ற மனுவில் கூறியிருந்தது.

தொலைக்காட்சியின் மரியாதை டிஆர்பியை விட முக்கியமானது – ராஜ்தீப் சர்தேசாய்

அர்னாப் கோஸ்வாமி கொடுத்த பணத்தை வைத்து தாஸ்குப்தா நகைகள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக மும்பை போலீஸ் கூறுகிறது. அந்த நகைகளை தாஸ்குப்தாவின் வீட்டிலிருந்து கைப்பற்றியதாகவும் போலீஸ் கூறியுள்ளது.

“தாஸ்குப்தாவை மிரட்டி அவரது வாக்குமூலம் வாங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் கமலேஷ் கும்ரே வாதிட்டுள்ளார். “போலீஸ் பாதுகாவலில் யார் வேண்டுமானாலும் மிரட்டி அத்தகைய வாக்குமூலத்தைப் பெற முடியும்” என்று எகனாமிக் டைம்ஸ்-டம் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்