Aran Sei

“அர்னாப் கோசாமியை கைது செய்ததற்கு நன்றி” – தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பம்

credits : the hindu

2018 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி மும்பை மாநகரம் அலிபாக்கில், 53 வயதான அன்வே நாயக் எனும் கட்டடக் கலைஞர் தற்கொலை செய்து கொண்டார். ரிபப்ளிக் டிவியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஸ்கை மீடியாவைச் சேர்ந்த ஃபெரோஸ் ஷேக் மற்றும் ஸ்மார்ட்வொர்க்ஸைச் சேர்ந்த நீதிஷ் சார்தா ஆகிய மூவரும் தனக்கு தர வேண்டிய 5 கோடியே 40 லட்சம் ரூபாயை தர மறுத்ததால் தற்கொலை செய்து கொள்வதாக தன்னுடைய இறுதி கடிதத்தில் குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஷேக் 4 கோடியும், நீதிஷ் சர்தா 55 லட்சமும், அர்னாப் கோஸ்வாமி 83 லட்சமும் அன்வே நாயக்கிற்கு கொடுக்க வேண்டியிருந்ததாகவும், இந்த விவகாரத்தில் முதலில் வழக்கு பதியப்பட்டு பின்பு முடித்து வைக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் இன்று அலிபாக் மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதம், மகாராஷ்ட்ரா அரசின் குற்றவியல் புலனாய்வுத் துறை ( சிஐடி ) இந்த வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது மகாராஷ்ட்ரா அரசு. அன்வே நாயக்கின் மகள் அதன்யா நாயக் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மும்பையின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று காலை மும்பை காவல்துறையால் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமியின் கைதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வே நாயக்கின் மகள் அதன்யா,  “ரிபப்ளிக் டிவி அலுவலகத்திற்கு செய்த வேலைக்கு பணத்தை கேட்டபோது அர்னாப் என் தந்தையின் தொழிலையும் வாழ்க்கையயும் அழித்துவிடுவேன் என கடுமையாக மிரட்டினார். நாங்கள் அவர்மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அன்று இருந்த காவல் ஆணையர் சஞ்சய் பார்வேவை பலமுறை சந்தித்தும் எந்த பலனும் இல்லை. அவருடைய அரசியல் தொடர்புகளின் மூலம் நாங்கள் தொடுத்த வழக்கை அவர் முடித்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “எங்கள் குடும்பத்திற்கு வர வேண்டிய பணமான 83 லட்சத்தை பலமுறை கெஞ்சிப்பார்த்தும் அவர் எங்களிடம் தரவில்லை. அர்னாப்பை 5 நிமிடம் சந்திக்க நானும் எனது தாயாரும் பலமுறை முயன்றும் அவர் எங்களை சந்திக்கவில்லை. எங்களை தொலைப்பேசி அழைப்புகளின் மூலம் பலர் மிரட்டினார்கள், பலர் எங்களை பின் தொடர்ந்தார்கள்” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எங்கள் குடும்பம் பல அழுத்ததிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது, எங்களுக்கு நீதி வேண்டும் என கூறியுள்ளார் அதன்யா நாயக்.

அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததற்காக அன்வே நாயக்கின் மனைவி மற்றும் மகள் இருவரும் மகாராஷ்ட்ரா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்