தனியார் தொலைக்காட்சியான ரிபப்லிக் டிவியின் தலைமைச் செய்தியாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மகாராஷ்டிரா பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கமுடியாதென அறிவித்துள்ளது
கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு அர்னாப்தான் காரணமென்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அர்னாப் கோஸ்வாமியை அவர் வீட்டில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைதிற்குப் பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்துள்ளார் .
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் நிகில் வாக்லே “அர்னாப் கோஸ்வாமியின் வழக்கிற்கும் பத்திரிக்கைச் சுதந்திரத்திருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு பழைய வழக்கு, தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கம் விசாரிக்க மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இந்த விசாரணையைக் கோரியிருந்தனர்” என்று கூறியுள்ளார்.
Arnab Goswami’s arrest has nothing to do with journalism.This is an old case which Devendra Fadnavis government refused to investigate. Victim’s family had demanded this investigation. https://t.co/XAEc6enJeU
— nikhil wagle (@waglenikhil) November 4, 2020
அர்னப் கோஸ்வாமியின் கைது அவருடைய தனிப்பட்ட பிரச்சினை என்று மஹராஷ்ட்ரா பத்திரிகையாளர் சங்கம் கூறியள்ளது. அர்னாப் ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார், எனவே கருத்து சுதந்திரத்திற்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள மஹாராஷ்டிரா பத்திரிக்கையாளர் சங்கம் அர்னாபின் கைதை கண்டிக்க மறுத்துள்ளது.
Journalist Association in Maharashtra refused to condemn the arrest of #ArnabGoswami saying it is an individual issue. He has been arrested not for his journalism so freedom of speech has nothing to do with this case. Goswami arrested for abatement for suicide @NewIndianXpress
— Sudhir Suryawanshi (@ss_suryawanshi) November 4, 2020
இந்திய பத்திரிகை ஆசியர்கள் சங்கம் (Editors Guild of India) அர்னாப் கோசாமியின் கைதுக்க கண்டம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.