Aran Sei

‘ தற்கொலையை தூண்டினார் ‘ – அர்னாப் கோஸ்வாமி கைது – அமித் ஷா கண்டனம்

credits : the hindu

ட்டடக் கலைஞர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாகக்  கூறி கைது செய்யப்பட்டுள்ளார் ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி.

கடந்த 2018, மே 5-ம் தேதி 53 வயதான கட்டடக் கலைஞர் அன்வே நாயக் தற்கொலை செய்து கொணடார். மகன் தன் உயிரை மாய்த்து கொண்டதைக் கேட்ட அவருடைய தாய் குமுத் நாயக்கும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு காரணம் அர்னாப் கோஸ்வாமி என்று தன்னுடைய தற்கொலை குறிப்பில் பதிவு செய்திருந்தார் நாயக். ”அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் தனக்கு தர வேண்டிய 5 கோடியே 40 லட்சம் ரூபாயை தர மறுப்பதே இந்த முடிவிற்கு தன்னை தள்ளியதாக” குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு நாயக்கினுடைய மனைவி அக்ஷிதா அளித்த புகாரின் பேரில் அர்னாப் மீது அலிபாக் காவல்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகாரில் ”ரிபப்ளிக் டிவி அலுவலகத்தை வடிவமைத்து கொடுத்த அன்வே நாயக்கிடம், அவர் செய்த வேலைக்கான பணத்தை தர மறுத்துளார் அர்னாப். மேலும் நாயக் மற்றும் அவரது தாயார் பணம் கிடைக்காத மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு அலிபாக் காவல்துறையால் பதியப்பட்ட இந்த வழக்கு 2019-ம் ஆண்டு ராய்காத் காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் மே மாதம் இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி  மகாராஷ்ட்ரா அரசின் குற்றவியல் புலாய்வுத் துறை ( சிஐடி )க்கு மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டது.

இதற்கான காரணத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக். அதில் ”தன்னுடைய தந்தையும், பாட்டியும் தற்கொலை செய்து கொண்ட இந்த பண மோசடி விவகாரத்தை அலிபாக் காவல்துறை விசாரிக்கவில்லை என்று அன்வே நாயக்கின் மகள் அதன்யா நாயக் என்று குற்றஞ்சாட்டிள்ளார். எனவே, இந்த வழக்கை சிஐடியிடம் ஒப்படைத்துள்ளதாக” தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர்.

இதற்கு பதிலளித்த ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. இது சில உள்நோக்கம் கொண்ட இயக்கங்களால் ரிபப்ளிக் மீது கட்டப்படும் வெறுப்பு பிரச்சாரம் என கூறியுள்ளது.

காஷ்மீர் – 24 மணி நேரம் போலீஸ் காவலில் – பத்திரிகையாளரின் அனுபவம்

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளது ”ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் இது எமர்ஜென்சியை நினைவூட்டுவதாகவும்” கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அமைச்சர் ஸ்மிருதி இரானி ”இன்று அர்னாப் கைதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஊடகவியலாளர்களுக்கும் இது ஒரு நாள் நடக்கலாம்” என எச்சரித்துள்ளார்.

“சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு கத்திக் கொண்டிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி, என்னுடைய கணவர் மற்றும் அவரது தாயாரின் மரணத்திற்கு எப்போது நீதி கிடைக்கும்” என சமூக வலைதள பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் அன்வே நாயக்கின் மனைவி அக்‌ஷிதா.

மறுபுறம் justiceforanvaynaik எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அர்னாப் கோஸ்வாமியின் கைதை பல தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்