Aran Sei

போதையில் மூழ்கியுள்ளதா பாலிவுட்? ரிபப்ளிக் டிவி மீது வழக்கு

Image Credits: India TV

நேற்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, ரிபப்ளிக் மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகள் திரைப்படத் துறைக்கு எதிராகப் பொறுப்பற்ற, தரக்குறைவான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர் என்று ‘தி வயரில்’ செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக இத்தொலைக்காட்சிகள் நடத்தும் ஊடக விசாரணைகளை நிறுத்துவதற்கும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நான்கு பாலிவுட் தொழிற்சங்கங்கள் மற்றும் 34 முன்னணித் தயாரிப்பாளர்களின் இந்த வழக்கு, சினிமாத்துறையுடன் தொடர்புடைய நபர்களின் தனிஉரிமையில் ஊடகங்கள் தலையிடுவதைத் தடுக்க முயன்றுள்ளது.

இது ரிபப்ளிக் தொலைக்காட்சி அதன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, நிருபர் பிரதீப் பண்டாரி, டைம்ஸ் நவ், அதன் தலைமை ஆசிரியர் ராகுல் சிவசங்கர் மற்றும் குழு ஆசிரியர் நவிகா குமார், அறியப்படாத பிரதிவாதிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் பாலிவுட்டுக்கு எதிராகப் பொறுப்பற்ற, இழிவான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிடுவோருக்கு அதனைத் தவிர்க்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கு டிஎஸ்கே சட்ட நிறுவனத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “அழுக்கு, அசுத்தம், கறை, போதை போன்ற தரைகுறைவான சொற்களையும் வெளிப்பாடுகளையும் பாலிவுட்டுக்கு எதிராகப் பயன்படுத்திய சமயத்திலும் பாலிவுட்டின் அழுகை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற கருத்துகளை முன்வைத்த சமயத்திலும்தான் இந்த வழக்கு வந்துள்ளது” என்று இச்சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அரேபியாவின் அனைத்து வாசனைத் திரவியங்களும் பாலிவுட் அடித்தளத்தின் துர்நாற்றத்தைப் பறிக்க முடியாது. இது நாட்டின் மிக மோசமான தொழில், கோகோயின் மற்றும் எல்எஸ்டியால் பாலிவுட் மூழ்கியுள்ளது,” போன்ற கருத்துகளை முன்வைத்ததால் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்