Aran Sei

‘சாதி ரீதியாக வாக்குகளைத் பெறவே பாஜக புதிய அமைச்சர்களை நியமிக்கிறது ‘ – மாயாவதி குற்றச்சாட்டு

சாதி ரீதியாக வாக்குகளைத் பெறவே யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில்  புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்  மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற  தேர்தல்  அடுத்த ஆண்டு  நடைபெற    உள்ள நிலையில்  இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்றைய தினம்  உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் அமைச்சரவையில் புதிதாக   ஒரு கேபினெட் அமைச்சர்  மற்றும்  ஆறு அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

புதிதாக  பதவி ஏற்றுக்கொண்ட  அமைச்சர்களில்  கேபினெட் அமைச்சராக பதவி ஏற்றுள்ள   ஜிதின் பிரசாதா பிராமணச்  சமூகத்தையும், மீதமுள்ள 6 பேரில் 2  பேர் பட்டியலின சமுகத்தையும்  ,1 பழங்குடியின சமுகத்தையும்,   3 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள   மாயாவதி, “சாதியின் அடிப்படையில் வாக்குகளை திரட்டுவதற்காகப் பாஜகவால் நேற்று அமைச்சராகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சமயம்  அவர்கள் அதை ஏற்காமல் இருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சமூகங்களைச் சார்ந்தவர்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும்   பாஜக அரசு உறுதியான நடவடிக்கைகளை  மேற்கொள்ளவில்லை. மேலும்,  பாஜக தானாக  மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கூட நிறுத்திவிட்டது என்றும், பாஜகவின்  இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து அச்சமூக மக்கள் கவனம் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: THE INDIAN EXPRESS 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்