Aran Sei

’தேர்தல் பணியின் போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பொருளாதார உதவி தேவை’ – மாயாவதி

கொரோனா தீவிரமடைந்துக்கொண்டிருக்கும் இச்சூழலில், உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலை ஒத்தி வைத்திருந்தால், தேர்தல் பணியில் ஈடுபட்ட எண்ணற்றோரின் இறப்பை தடுத்திருக்க முடியும் என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.

நேற்றுடன் (ஏப்ரல் 29), உத்தரபிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் முடிவடைந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட பலர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 30), மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தீவிரமடைந்துக்கொண்டிருக்கும் இச்சூழலில், உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலை ஒத்தி வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தேர்தல் பணியில் ஈடுபட்ட எண்ணற்றோரின் இறப்பை இது தடுத்திருக்கும். இது பெரும் மோசம்.” என்று தெரிவித்துள்ளார்.

முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

மேலும், “அங்கனம் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும். தற்போதைய சூழலில், கொரோனா பெருந்தொற்று கிராமங்களையும் பாதிக்கக்கூடும். அதை மனதில் கொண்டு, உத்தரபிரதேச அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகரங்களில் கொரோனா பரவியது போல கிராமங்களிலும் பரவாத வண்ணம் தடுக்க வேண்டும்.” என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்