Aran Sei

இந்து இஸ்லாமியர் ஒற்றுமையே பாஜகவின் அரசியல் அடித்தளத்தை உடைக்கும் – மாயாவதி

த்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் இந்து-இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி , இது  கடந்த 2௦13 ஆம் ஆண்டு நடந்த முசாபர் நகர் கலவரத்தில் ஏற்பட்ட வடுக்களுக்கு மருந்தாக அமையும் என்று  கூறியுள்ளார்.

மேலும், இது பலருக்கு அசௌகரியத்தைக் கொடுத்திருக்கும் என்றும் மாயாவதி  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, விவசாயிகள் இந்தியாவின் பெருமை என்றும்,  மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் இந்து-இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு ஆதரவாக குரல் எழுப்பியதன் காரணமாக “வெறுப்புணர்வை உருவாக்கிய பாஜகவின் அரசியல் தளம் தற்போது சரியத்தொடங்கியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

2௦13 ஆம் ஆண்டு நடந்த முசபார் நகர் கலவரத்தின் போது ஏறத்தாழ 62 பேர் கொல்லப்பட்டனர்.

source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்