Aran Sei

உத்தரபிரதேசத்தில் அதிகரிக்கும் டெங்குகாய்ச்சல் பாதிப்பு – மருத்துவ முன்னேற்பாடுகள் பற்றாக்குறையென மாயாவதி கண்டனம்

த்தரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ முன்னேற்பாடுகள் பற்றாக்குறையின் காரணமாக பலர் டெங்கு காய்ச்சலில் பலியாகியுள்ளதாக பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு நிலைமை மோசமடைந்துள்ளது குறித்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கவனம் கொள்ளவேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாயாவதி, “உத்தரபிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் டெங்கு மற்றும் அறியஇயலாத காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், இது மாநிலம் முழுதும் தீவிரமாகவும் பரவி வருகிறது. ஆனால், மருத்துவமனைகளில் போதிய முன்னேற்பாடுகள் பற்றாக்குறையால் பல நோயாளிகள் இறந்து வருகின்றனர். இது மிக மோசமானதாக உள்ளது. அரசு இது குறித்து கவனம் கொள்ளவேண்டும்”  என்று  தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தின் மீரட் பகுதியில் 30 க்கும் மேற்ப்பட்டவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: The new indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்