Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், ஏன் மதரீதியாக குடியுரிமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது – ஒன்றிய அரசுக்கு ஐ.யூ.எம்.எல் கேள்வி

இந்திய உச்சநீதி மன்றம்

ஸ்லாமியர்கள் அல்லாத மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு, குடியுரிமை வழங்க உத்தரவிட்டதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சார்ந்த இஸ்லாமியர் அல்லாத இந்து, சீக்கிய, சமண, பௌத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ ஆகிய மதங்களை சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை அளிக்க வழிவகை செய்கிறது என்று கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது.

இஸ்லாமியர் அல்லாத அகதிகள் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமென உத்தரவிட்ட ஒன்றிய அரசு – அரசியலமைப்பிற்கு எதிரானது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், கடந்த மே 28 அன்று, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த, தற்போது குஜராத்தின் 13 மாவட்டங்களிலும் ,ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளிலிலும் வசிக்ககூடிய, இஸ்லாமியர் அல்லாத இந்து, சீக்கிய, சமண மற்றும் பௌத்த மதத்தைச் சார்ந்த அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனைதொடர்ந்து, இந்த உத்தரவுக்கு எதிராக இந்தியா யூனியன் முஸ்லிம் தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் பூர்வீக இஸ்ஸாமியர்கள் – குடியுரிமை சிக்கலை தவிர்க்க ஜனகோஸ்தியா சம்மனே பரிஷத் முடிவு

மேலும், இந்த அறிவிப்பானது, “வெறுமனே உள்ளூர் அதிகாரிகளுக்குக் குடியுரிமை பதிவு மற்றும் தன்மையின் அடிப்படையின் வழியாக குடியுரிமை வழங்குதலுக்கு அதிகாரத்தை ஒப்படைக்கிறது”என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த அறிவிப்பானது குடியுரிமை திருத்தச் சட்டம் பிரிவு 16 ன் படி அகதிகளுக்குக் குடியுரிமை அளித்தலுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் நடவடிக்கை என்றும், இதற்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

” சிஏஏ-ன் கீழ் தடுப்பு முகாம்கள் அமைக்க முடியாது, தேவைக்கேற்ப மாநிலங்கள் அமைத்துள்ளன ” – மத்திய உள்துறை அமைச்சகம்

இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஐ.யூ.எம்.எல் வழக்கறிஞர்,”இந்த அறிவிப்பிற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு சம்பந்தமில்லை என்றால், ஏன் மத ரீதியாக  குடியுரிமை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சகம், “எந்தவொரு வெளிநாட்டவரும் எந்த நேரத்திலும் இந்தியாவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்” என்று பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளதாகவும்  தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

கடவுளை ‘அல்லாஹ்’ என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம்: மலேசியா உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், 29 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஒன்பது மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க ஒன்றிய அரசு அதிகாரங்களை அளித்துள்ளதாகவும்,  எந்த நேரத்திலும் இந்த அதிகாரங்களை  பயன்படுத்துவதற்கான உரிமையை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் ”என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்