Aran Sei

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் உள்ள மசூதியை அகற்ற வேண்டும் – மதுரா நீதிமன்றத்தில் மனு

துராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் உள்ள கோவில் வளாகத்தின் அருகில் இருக்கும், ஷாஹி ஈட்கா மசூதி அகற்றப்பட வேண்டும் என, மதுரா நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷாஹி மஸ்ஜித் ஈட்கா ஆணையத்திற்கும், ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவை சன்ஸ்தானிற்கும் இடையே 1968 ஆம் ஆண்டு மதுரா நீதிமன்றம் ஏற்படுத்திய சமரச உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என இம்மனுவில் கோராப்பட்டுள்ளது.

‘கிருஷ்ண ஜன்மபூமி’ : மற்றுமொரு இருண்ட காலம் நோக்கி

சிவில் நீதிமன்ற நீதிபதி நேகா பதுரியா முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், “விரஜ்மான் தாகூர் கேசவ் தேவ் ஜி மஹாராஜ் கத்ரா கேசவ் தேவின் நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஷாஹி மஸ்ஜித் ஈட்கா அகற்றப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை” என்று வழக்கறிஞர் மஹேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணர் பிறப்பிட கோவில் வளாகத்தில் உள்ள முதன்மை கடவுளான மஹாராஜ் கத்ரா கேசவ் தேவ் உட்பட ஐந்து நபர்கள் மனுதாரரர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். மற்ற மனுதாரர்களாக, வழக்கறிஞர் ராஜேந்திர மஹேஸ்வரி, ஐக்கிய இந்து முன்னணியின் நிறுவனர் ஜெய் பக்வான் கோயல் மற்றும் தர்ம் ரக்‌ஷா சங்க் விருந்தாவன் அமைப்பின் தலைவர் சௌரப் கௌர்  உள்ளனர்.

(பிடிஐ செய்தி)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்