Aran Sei

காவல்துறையினரை செருப்பால் அடித்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர் – காவல்துறையினர் மீது கொலைமுயற்சி வழக்கு

ர்.எஸ்.எஸ் ஊழியர்களைத் தாக்கியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரா பகுதியில் உள்ள யமுனா பாபா காட் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் மனோஜ் குமார், மற்றும் அதன் ஊழியர்களைக் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரானவர்கள் டெல்லியில் போராடுகிறார்கள் – விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்த மதுரா பகுதியின் காவல் கண்காணிப்பாளர் கௌரவ் புரோவர், ஒரு உதவி ஆய்வாளர், 2 ஊர்க்காவல் படை காவலர்கள் உட்பட நான்கு பேர்மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி கூறியுள்ளது.

‘பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றதுண்டா?’ – எல்.முருகனுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் காரணமாக விருந்தாவன் பகுதியில் உள்ள ஷானு ஷையா மருத்துவமனையின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையில் வன்முறை எழுந்ததை அடுத்து தடியடி நடத்தி காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்ட முயன்றதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணி: ’ஆர்.எஸ்.எஸ்ஸின் குறிக்கோள்களை நிறைவேற்றும் தமிழக அரசு’ – வைகோ குற்றச்சாட்டு

மேலும், இந்தப் போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ் பெண் ஊழியர் ஒருவர் தனது செருப்பால் காவலர் ஒருவரை தாக்குவது மற்றும் போராட்டக்காரர்கள் காவலர்களைத் துரத்தித் தாக்குவது குறித்த காணொளிகள் வெளியாகியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்