Aran Sei

ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு மசூதியின் மின்னணுசாதனங்களை மிரட்டி எடுத்து சென்றதாக புகார் – வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

த்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோவர்தன் நகரில் உள்ள, மசூதியில் 8 பேர் கொண்ட கும்பலொன்று முரட்டுத்தனமாக நுழைந்து ’ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி  அங்குள்ள ஒலிபெருக்கியின் மின்சாதனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்தக் கும்பல் மசூதியின் இமாமையும் மிரட்டியுள்ளனர்.

”ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் நோயாளிகள்” – உத்தரபிரதேச மருத்துவர்கள் தகவல்

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் கவுரவ் குரோவர், “படா பஜார் பகுதியில் உள்ள மசூதியில் 8 அல்லது 9 பேர் கொண்ட கும்பல் முரட்டுத்தனமாக நுழைந்து, மசூதியின் தூணில் ஏறி ஒலிபெருக்கியின் ஒயர்களை சேதப்படுத்தியுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

மேலும், அப்போது எதிர்வினையாற்றிய அந்த மசூதியின் இமாமை அவர்கள் மிரட்டியுள்ளதாகவும் கவுரவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

இந்நிலையில், இமாம் மொஹம்மது இலியாஸ் அளித்த புகாரின் பேரில் பிரிவு 295 (A) கீழ் வழக்குப்பதியப் பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கண்டரே காலனியைச் சார்ந்த சவுரவ் நும்பேர்தார், பவன் சர்மா, தீரஜ் கௌஷிக், கன்ஹா தாகூர், தீபக் சர்மா, ராக்கி, டோரி மற்றும் ஜெய் தாகூர் ஆகியோர் என்று காவல்துறை தரப்பில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source; ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்