Aran Sei

சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாதர் சங்கம் கோரிக்கை

சென்னை ஐஐடியில் படித்து வரும் பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளானது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.

2017 ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி வேதியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவருடன் படிக்கும் சக மாணவர் 3 பேரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக துறை பேராசிரியரிடம் தெரிவித்தபோது, அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததோடு, மாணவியையும் சாதிய ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி அதே மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவி, 2020ல் ஐஐடியின் உள்புகார் கமிட்டியில் புகார் தெரிவித்துள்ளார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

புகார்மீது விசாரணை நடைபெற்று, அந்த அறிக்கை ஐஐடி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

கொல்லப்பட்ட கோகுல்ராஜும் மாதொருபாகனும் – ஜெ.பாலசுப்பிரமணியம்

இந்நிலையில், மார்ச் 22 தேதி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாதர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதில், ”பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். புகார்மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரின் மீதும் எஸ்/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்