Aran Sei

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் – தகனம் செய்ய இடம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

கொரோனா இரண்டாவது அலை பரவலில் டெல்லில் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தகனம் செய்ய இடம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

வடகிழக்கு டெல்லியின் சீமாபுரியில் உள்ள தகன மேடையில், இடம் கிடைக்காமல், உடல்கள் பார்க்கிங் பகுதியில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஷாகீத் பகத் சிங் சேவா தள் என்ற தன்னார்வ மருத்துவ அமைப்பை நடத்தி வரும், ஜிதேந்தர் சிங் சண்டி, ”வியாழன் (ஏப்ரல் 22) மதியம் 60 உடல்கள் வந்த நிலையில் தகனம் செய்ய இடமில்லாததால் பல உடல்கள் பார்கிங் பகுதியில் வரிசையில் வைக்கப்பட்டிருக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

‘உ.பியில் ஆம்புலன்ஸ், படுக்கை இல்லாமல் மரணிப்பவர்களுக்கு சுடுகாட்டில் கூட இடமில்லாத அவலம்’ – அகிலேஷ் குற்றச்சாட்டு

“டெல்லியில் இது போன்ற ஒரு நிகழ்வை யாரும் பார்த்ததில்லை. 5, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், புதிதாகத் திருமணமானவர்கள் என பலரின் உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. இது பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”கொரோனா முதல் அலையில் சராசரியாக 8 முதல் 10 உடல்களே தகனம் செய்யப்பட்டன, அதிகபட்சமாக ஒரே நாளில் 18 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. ஆனால் கடந்த செவ்வாய்கிழமை (ஏப்ரல் 20) ஒரே நாளில் 78 உடல்கள் தகனம் செய்யப்பட்டன என ஜிதேந்தர் தெரிவித்துள்ளார்.

Source : Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்