ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை சீரமைப்பதாக கூறி தியாகிகளை அரசு அவமத்துள்ளது. தியாகத்தின் பொருள் தெரியாத ஒருவரால் மட்டுமே அத்தகைய அவமதிப்பை ஏற்படுத்த முடியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
102 ஆண்டுகள் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைக்கு காரணமாக இருந்த நினைவிடத்தை புணரமைப்பு என்றப் பெயரில் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்தக் கொடூரமான நாளில் மக்கள் தப்பித்துச் செல்ல முடியாதபடி மறிக்கப்பட்ட குறுகிய பாதை, இப்போது பளபளப்பான புதிய பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தான் பெரும்பாலானவர்களின் விமர்சனப் பொருளாக உள்ளது.
நினைவு சின்னத்தைச் சீரமைத்தது தொடர்பான சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி, “தியாகத்தின் பொருள் தெரியாதவர்கள் மட்டுமே ஜாலியன் வாலா பாக் தியாகிகளுக்கு இத்தகைய அவமதிப்பை ஏற்படுத்த முடியும்.” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “நான் தியாகியின் மகன் – தியாகிகளை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டேன். இந்த அநாகரீகமான கொடுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் ” என இந்தியில் மற்றோரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
”சுதந்திர போராட்டத்தில் இருந்து விலகி இருந்தவர்களால் மட்டுமே இவ்வாறு அவதூறு செய்ய முடியும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “எங்கள் தியாகிகளை அவமதித்தல். பைசாக்கிக்காக கூடிய இந்து, இஸ்லாமியர், சீக்கியர்களுக்கு ஏற்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலை தான் நமது சுதந்திர போராட்டத்தைத் தூண்டியது. இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் பிரிட்டிஷ் ஆட்சியின் பயங்கரவாத்தால் ஊடுருவப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் இருந்து விலகி இருந்தவர்களால் மட்டுமே, இவ்வாறு அவதூறு செய்ய முடியும்.” என பதிவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பு ”எங்கள் வரலாற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.” என சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “வலி உண்மையானது, இழப்பு மகத்தானது, சோகம் மறக்க முடியாதது. சில நேரங்களில் இடங்கள் வலியைத் தூண்டுகின்றன. நாங்கள் என்ன இழந்தோம் மற்றும் எதற்காகப் போராடினோம் என்பதை நினைவூட்டுகின்றன. அந்த நினைவுகளை ‘அழகுபடுத்த’ அல்லது மாற்றியமைக்க முயற்சிப்பது எங்கள் வரலாற்றில் பொரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.” என பதிவிட்டுள்ளார்.
மறுசீரமைக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிடம் மற்றும் நான்கு காட்சியகங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்டிருந்த அடக்குமுறை சட்டமான ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். நிராயுதபாணியான மக்களின் மீது ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக அந்த இடத்தில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
Source : Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.