இயக்குனர் மாரிசெல்வராஜ் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும்❤️ தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஐயா@mkstalin அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ❤️❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) May 3, 2021
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும். தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராகப் பொறுப்பேற்கும் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்” என்று பதிவிட்டுள்ளார்.
திரைத்துறையிலிருந்து மக்கள் மன்றத்துக்கு செல்லும் மரியாதைக்குரிய சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் சகோதரர் @iamvijayvasanth அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும் ❤️ நீங்கள் வெற்றி பெற்றதை போல உங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் வெற்றியடைட்டும்❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) May 3, 2021
இதே போன்று திரைத்துறையிலிருந்து சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ள உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்துக்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், “திரைத்துறையிலிருந்து மக்கள் மன்றத்துக்குச் செல்லும் மரியாதைக்குரிய சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், சகோதரர் விஜய் வசந்த் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும் நீங்கள் வெற்றி பெற்றதை போல உங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் வெற்றியடைட்டும்” என்றும் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.