Aran Sei

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வுமனு – மகாராஷ்டிரா மாநில அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை

ராத்தா இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்தக் குழு பரிந்துரைத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே 5 அன்று, மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராட்டியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

இந்நிலையில், மே 11 அன்று, மகாராஷ்ட்ரா மாநில அரசு இந்த தீர்ப்புகுறித்து ஆராய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் போசல் தலைமையில் குழுவை நியமித்தது.

இதுகுறித்த அறிக்கையை அந்தக் குழு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயிடம் அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், மேலும், அரசியல்சாசன அமர்வில் இந்த தீர்ப்பு குறித்து சீராய்வு தாக்கல் செய்யலாமெனவும் பரிந்துரைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எழுவர் விடுதலையே எங்கள் நோக்கம்; 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படும்’ – முதல்வருடனான சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி தகவல்

இந்த குழுவின் அறிக்கையில் 40 க்கும் மேற்பட்ட சட்டநுணுக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்காக கொண்டுவரப்பட்ட 103 வது அரசியல்சாசன திருத்தத்தைக் கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்