Aran Sei

இடஒதுக்கீட்டின் வரம்பை மறுஆய்வு செய்யலாமா – மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

ட ஒதுக்கீடிற்கான வரம்பு 50 விழுக்காட்டை மீறக் கூடாது என 1992 ஆண்டு உச்சநீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா என்று தற்போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி  அம்மாநில அரசு 2018 ஆம் ஆண்டுச் சட்டம் நிறைவேற்றியதை அடுத்து அம்மாநிலத்தில் இட ஒதுக்கீடு 68 விழுக்காடாக அதிகரித்தது.

மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

காற்று மாசுப்பாட்டால் அவதியுறும் டெல்லி மக்கள்: பொறுப்பற்று செயல்படுவதாக பாஜகவை குற்றஞ்சாட்டும் ஆம் ஆத்மி

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

மண்டல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கிறஞர் இந்திரா சஹானி 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததோடு, இட ஒதுக்கீட்டிற்கான வரம்பை 50 விழுக்காடாக நிர்ணயித்திருந்தது.

நேற்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடிற்கு பிறகு இட ஒதுக்கீடு 68 விழுக்காடாக அதிகரித்தை அடுத்து 1992 ஆம் வழக்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்திர பிரதேசத்தில் கைதான பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் – சிஏஏ போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு

இதில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தார், “1992-ம் ஆண்டுத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை. இத்தீர்ப்பு பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. தற்போது 50% இடஒதுக்கீடு வரம்புபற்றி மட்டுமே கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே இத்தீர்ப்பை 9 நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது. இதனை மறுஆய்வு செய்ய வேண்டுமானால் 11 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்க வேண்டும். மேலும், 50 சதவீத இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று” என்றார்.

ஆயுர்வேதா படிப்பில் அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக அரசு  சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதிடும்போது, “தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான தனி சூழ்நிலைகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை தொடர்புடையது” என்றார்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இவ்வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என் இரு மாநில வழக்கறிஞர்களும் கோரினர்.  இதனை ஏற்காத நீதிபதிகள், இதுதொடர்பாக மாநில அரசுகள் தங்கள் கருத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்