Aran Sei

கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரி: தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்ட்கள்

த்தீஸ்கர் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடனான மோதலின்போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியின் தற்போதைய புகைப்படத்தை மாவோயிஸ்ட்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன் வழியாக, கடத்தப்பட்ட அதிகாரி எங்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளார் என்று மறைமுகமாக உணர்த்தியுள்ளனர்.

கடத்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் அதிகாரி – பேச்சுவார்த்தைக் குழுவினரை அறிவிக்க மாவோயிஸ்ட் கோரிக்கை

நேற்று (ஏப்ரல் 6) மாவோயிஸ்ட்களின் தண்டகார்ன்யா சிறப்பு மண்டலக் குழுச் செய்தி தொடர்பாளர் விகல்ப் வெளியிட்ட அறிக்கையில், “கடத்தப்பட்டுள்ள ராகேஸ்வர் சிங் மன்ஹாஸை விடுவிக்கப் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் பெயர்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் பிறகு எங்கள்வசம் இருக்கும் அதிகாரியை விடுதலை செய்வோம். அதுவரை அவர் எங்களிடம் பத்திரமாக இருப்பார்.” என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், அறிக்கை வெளியிடப்பட்ட மறுநாளான இன்று (ஏப்ரல் 7), கடத்தப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ராகேஸ்வர் சிங் மன்ஹாஸின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்