Aran Sei

இரும்புத்தாது சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மாவோயிஸ்ட்கள் தாக்குதல் – பணியை நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை

த்தீஸ்கர் மாநிலம் நாராயன்பூர் பகுதியில் உள்ள இரும்பு த் தாது சுரங்கத்தில், மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் ராய்ப்பூரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோங்கர் மலைப்பகுதியில் ஜெயஸ்வால் நெக்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு இரும்புத்தாது சுரங்கம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – பாதுகாப்பு படையினர் பொதுமக்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

இதுகுறித்து தெரிவித்துள்ள மூத்த காவல்துறை அதிகாரி சுந்தர்ராஜ் .பி ,”இந்தப் பகுதிக்கு காலை பத்து மணியளவில்  வந்த நக்சல்கள் ,  தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலையை நிறுத்துமாறு கூறியிருக்கின்றனர்” என்று அவர் கூறியதாகவும் என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரும்புத்தாது சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அப்போது நடந்த தாக்குதலில் பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரி: தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்ட்கள்

இதற்கு பின்னர், மாவோயிஸ்ட்கள் அருகில் இருந்த பாதுகாப்பு படையினரின் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது எந்த பாதுகாப்பு படையினருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – 22 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

கடந்த 2020 இந்தப் பகுதியில் இரும்புத் தாது சுரங்கம் அமைப்பதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்