Aran Sei

கடத்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் அதிகாரி – பேச்சுவார்த்தைக் குழுவினரை அறிவிக்க மாவோயிஸ்ட் கோரிக்கை

சுக்மா-பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடனான மோதலின்போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியை மீட்க பேச்சுவார்த்தை குழுவினரின் பெயர்களை அறிவிக்குமாறு மாவோயிஸ்ட்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் தண்டகார்ன்யா சிறப்பு மண்டலக் குழுச் செய்தி தொடர்பாளர் விகல்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடத்தப்பட்டுள்ள ராகேஸ்வர் சிங் மன்ஹாஸை விடுவிக்கப் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் பெயர்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் பிறகு எங்கள்வசம் இருக்கும் அதிகாரியை விடுதலை செய்வோம். அதுவரை அவர் எங்களிடம் பத்திரமாக இருப்பார்” என தெரிவித்துள்ளார்.

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

மத்திய ஆயுத காவல் படையின் கோப்ரா பிரிவைச் சேர்ந்த அதிகாரி ராகேஸ்வரி சிங் மாவோயிஸ்ட்களுடனான மோதலில் காணவில்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜம்முவில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களைச் சந்தித்த மூத்த சிஆர்பிஎஃப் அதிகாரி, அரசாங்கம் அவர்களுடன் துணை நிற்பதாகவும், மன்ஹாஸை திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

பஸ்தார் வரம்பின் காவல்துறை தலைவர் பி.சுந்தர்ராஜ், இதுவரை மன்ஹாஸை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், காணாமல் போன அதிகாரிகுறித்த தகவல்களுக்காகக் கிராம மக்கள்,சமூக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து பேசிய விவகாரம் – உதயநிதி ஸ்டாலினிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மன்ஹாஸ் கடத்தப்பட்டிருப்பதாகச் சிறப்பு மண்டலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

ஏப்ரல் ஆம் தேதி தண்டகார்ன்யா சிறப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதலில் 24 பாதுகாப்பு படை அதிகாரிகள் உயிரிழிந்துள்ளதாகவும், 31 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் 4 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில்  14 ஆயுதங்கள், 2 ஆயிரம் தோட்டாக்கள் இன்னும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source: The Indian Express 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்