Aran Sei

கேரளா சில்வர்லைன் மெட்ரோ திட்டத்திற்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு – மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கோழிக்கோட்டில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

கேரளாவில் முன்மொழியப்பட்டுள்ள சில்வர்லைன் ரயில்வே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி தாலுகாவில் உள்ள மட்டிக்குன்னு கிராமத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் கிராமப்பகுதிகளில் சில்வர்லைன் ரயில்வே திட்டத்திற்கு எதிராக நோட்டீஸ் விநியோக செய்து வருகின்றனர்.

சில்வர்லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் உள்ளூர் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மற்றும் முதலமைச்சரை விமர்சிக்கும் வகையிலுமான வாசகங்கள் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.

சந்தேகத்திற்குரிய மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்திருப்பது இதுவே முதல் முறை. மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் கிராமங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டது அறியப்பட்டிருந்தாலும், கேரயில் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக வெளிப்படையாக இதுவரை குரல் கொடுத்ததில்லை.

சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த தாமரச்சேரி காவல்துறையினர், சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ்களை பார்வையிட்டனர். இதை யார் செய்திருப்பார்கள் என்று கண்டறிய மாவோயிஸ்ட்களை கண்காணிக்கும் தண்டர்போல்ட் குழு உறுப்பினர்களிடம் தகவல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ்களும் கூட காணப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்