Aran Sei

மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் – தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

image credit : aajtak.in

கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் சட்டமன்ற உறுப்பினர் பீமா மாண்டவி கொல்லப்பட்ட வழக்கில்  சம்பந்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் குறித்து துப்புக் கொடுப்பவருக்குத் தேசிய புலனாய்வு முகமை லட்சக்கணக்கில் தொகை அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

மாவோயிஸ்ட்கள் பிடியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி – ஐந்து நாட்களுக்குப் பிறகு விடுதலை

அண்மையில், சத்தீஸ்கர் மாவட்டத்தில்  22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்ட முக்கிய போராளியான மத்வி ஹிட்மா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பசவராஜ் குறித்து தெரிவிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா அரசுகள் ஒட்டுமொத்தமாக 1.85 கோடி ரூபாய் அறிவித்திருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சாய்பாபா பணி நீக்கம் – மறுபரிசீலனை செய்யவேண்டுமென பேராசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்

மேலும், பார்ச சுக்கா 5 லட்சம், கிரி ரெட்டி – 7 லட்சம், மாசா மத்வி – 1 லட்சம்.,லிங்கே மட்கம் – 2 லட்சம், மத்வி தேவே – ₹ 50,000, மத்வி லிங்கா – ₹ 50,000, குஹ்ரம் சுனிதா – ₹ 50,000, மிடியம் சுரேஷ் – ₹ 50,000, உமேஷ் ஹேம்லா – ₹ 20,000, ஜெகதீஷ் குடம் – 3 லட்சம், பாக்கா ஹனுமந்து – 7 லட்சம் மற்றும் சப்போ ஹங்கா – 5 லட்சம் ஆகிய மாவோயிஸ்ட்களின் மீதும் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

யார் அந்த ஹிட்மா? – போலீஸ் படைகள் மீதான பல தாக்குதல்களுக்குப் பின் இருக்கும் நிழலான மாவோயிஸ்ட் தளபதி

இந்நிலையில் மற்றவர்களின் படம் கிடைக்காத நிலையில் ஹிட்மாவின் புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்