Aran Sei

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்

கொரோனா பரவுவதைச் சமாளிக்க தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், நெருக்கடியைச் சமாளிக்க 5 ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

”அடுத்த ஆறு மாதத்திற்கு தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை வாங்கும் அரசு, தேவையான தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அரசு தெளிவு படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், அதற்குப் போதுமான கையிருப்பு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டாவது ஆலோசனையாக, “மாநிலங்களுக்கு எவ்வாறு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்பதை வெளிப்படையாக மத்திய அரசு குறிப்பிட வேண்டும். அவசர தேவைக்கு என மத்திய அரசிடம் 10 விழுக்காடு போக மீதமிருப்பது திட்டமிட்டபடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்ற தெளிவான சமிக்ஞை இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பேரிடரை தேசிய மருத்துவ அவசர நிலையாக அறிவிக்க வேண்டும் – பிரதமரிடம் கோரிக்கை விடுத்த கபில் சிபில்

”பேருந்து மற்றும் டாக்ஸி ஒட்டுநர்கள், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்  45 வயதிற்கு கீழ் இருந்தாலும், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவதை வரையறை செய்ய மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மை அளிக்கப்பட வேண்டும்” என அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

”பொது சுகாதார அவசர நிலை ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், தடுப்பூசிகளை விரைவாக தயாரித்திட உதவும் விதமாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதி மற்றும் பிற சலுகைகளை வழங்க வேண்டும்”என கோரியுள்ளார்.

‘கொரோனா சிகிச்சைக்குப் மருத்துவமனையில் போதிய வசதி இல்லை’ – பணியை ராஜினாமா செய்த அரசு மருத்துவர்

”ஐரோப்பிய மருத்துவ முகமை அல்லது அமெரிக்காவில் உள்ள எஃப்.டி.ஏ போன்ற நம்பகமான அமைப்புகளால் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியும் எந்தவொரு இணைப்பு சோதனைகளும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

“தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் நடைமுறையை நாம் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் சதவீதத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது, இந்தியாவின் மக்கள் தொகையில் ஒரு சிறிய சதவீதத்திற்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சரியான கொள்கை வடிவமைப்பு மூலம், நாம் மிகவும் சிறப்பாகவும் மிக விரைவாகவும் தடுப்பூசி செலுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source : Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்