மணிப்பூர் மாநிலத்தில் சமூக செயல்பாட்டாளர் அதுவான் அபோன்மாய், கடத்திக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும் அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசின் சிறப்பு செயலாளருக்கு (உள்பாதுகாப்பு) சிறப்பு செயலாளர் (உள்துறை) எச். ஞான பிரகாஷ் எழுதியிருக்கும் கடிதத்தில், விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் முதலமைச்சர் என். பிரேன் கலந்து கொண்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்க டாமெங்லாங் மாவட்டத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வந்தபோது கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் டாமெங்லாங் மாவட்டத்தின் பல்லோங் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மணிப்பூரில் உள்துறையை கவனித்து வரும் முதலமைச்சர் பிரேன் சிங், அதுவான் அபோன்மாய் கொலைக்காரர்களை தேடி கண்டுபிடிக்க ஆயுதப்படை வீரர்களை அனுப்பினார். இருப்பினும், காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படையினரை திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
சோதனைப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை தலைவர் (மண்டலம் 1) கே. ஜெயந்தா, “தேடுதல் பணியில் இருப்பவர்களை திரும்ப பெறுவதற்கு எந்த உத்தரவு அளிக்கப்படவில்லை. செய்தி வெளியிடும் முன்பு ஊடகங்கள் தகவலைச் சரிப் பார்த்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
‘ராஜஸ்தான் திருமண பதிவு மசோதா குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும்’ – குழந்தை உரிமைகள் ஆணையம்
உள்துறை இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனக் கூறிய முதலமைச்சர் பிரேன் சிங், “குற்றவாளிகளை திசை திருப்ப ஒரு முயற்சியாக இருக்கலாம். ஆனால், கொலைக்கு காரணமானவர்களை பிடிப்பதே எங்கள் கவலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூரில் என்எஸ்சிஎன் (ஐஎம்) முகாம்கள் இருப்பதாகவும் அங்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த முகாம்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.
ஆயுதத்துடன் வந்தவர்கள் அதுவான் அபோன்மாய்யை கடத்தியபோது மாநில மற்றும் ஒன்றிய அரசின் படைகள் பார்வையாளர்களாக நின்றதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவரது உடல் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து, 34 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மண்டை ஓட்டில் சுத்தியல் மற்றும் மண்வெட்டியால் தாக்கிச் சேதப்படுத்திய காயங்கள் உள்ளன.
”இது என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பின் ஆட்களின் வேலை என்று நம்பப்படுகிறது. அவர்கள் தற்போது ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அபோன்மாய், ஜெயங்ராஜ் பௌடி அமைப்பின் மணிப்பூர், நாகாலாந்து, அசாம் மாநிலங்களின் ஆலோசகராக இருந்து வந்தார்” என ஞான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வழக்கின் தன்மை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பாதுகாப்பை கருத்தில் வழக்கு என்ஐஏ விசாரணைக்கு உகந்தததாக கருத்தப்படுகிறது.
இதற்கிடையில் இந்த கொடூரமான குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக செயல்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், கொலையாளிகளை அடையாளம் காட்டாத வரை அபோன்மாய் உடலைப் பெற போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.