Aran Sei

மணிப்பூர் அமைச்சர் மகளின் கொலை வழக்கு : கொலையில் தொடர்புடையவரை தூக்கிலிட்ட போராளிகள் நீதிமன்றம்

credits : eastmojo

ணிப்பூரின் அமைச்சர் பிரான்சிஸ் கஜோக்பாவின் மகளைக் கடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவரை போராளிகள் நீதிமன்றம் (Kangaroo Court) தூக்கிலிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு, நவம்பர் 4 ஆம் தேதி, மணிப்பூரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பிரான்சிஸ் கஜோக்பாவின் மூன்று வயது சிறுமி, தன்னுடைய பள்ளி (லிட்டில் ஃபிளவர்) வாசலில் ஆயுதமேந்திய போராளிகள் குழு ஒன்றால் கடத்தப்பட்டார்.

கடத்தல்காரர்கள் பெற்றோர்களிடத்தில் சிறுமியை மீண்டும் பத்திரமாக ஒப்படைக்க 15 லட்சம் ரூபாயை கோரியிருந்தனர். காவல்துறை கடுமையான தேடுதல் வேட்டையை மேற்கொண்டும் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

‘கார்ப்ரேட்டுகளால் நிலம் பறிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்’ – விவசாய சட்டத்திற்கு ஆதரவாக பாஜக எம்.பி உறுதி

இதையடுத்து (2003 ஆம் ஆண்டு) நவம்பர் 12 ஆம் தேதி, மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் சிறுமி படுகொலை செய்யப்பட்டு, ஒரு கோணிப்பையில் அடைக்கப்பட்டு, குளக்கரையோரம் வீசப்பட்டிருந்தார்.

இதையடுத்து, இந்தச் சம்வத்தில் தொடர்பிருப்பதாக போராளி குழுவின் தலைவர் நேண்டோ கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் அவர் ஜே.என்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

கடந்த 2019 ஆம் ஆண்டு, மார்ச் 26 ஆம் தேதி, நேண்டோ மருத்துவமனையிலிருந்து தப்பித்துச் சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆயுதேமேந்திய காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்த நேண்டோ எவ்வாறு தப்பித்துச் சென்றார் என்பதை காவல்துறையினர் இன்னும் விளக்கவில்லை.

மருத்துவமனையில் பணம் செலுத்த தாமதம்: அறுவை சிகிச்சை காயங்களை தைக்காமல் விட்ட மருத்துவர்கள்- சிறுமி பலி

இந்நிலையில், அமைச்சரின் மூன்று வயது குழந்தையைக் கடத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், போராளிக் குழுத் தலைவர் நேண்டோவை, போராளிகள் நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது. இந்தத் தூக்குத்தண்டனை அந்நிய நாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்