Aran Sei

அமித் ஷாவின் இந்தி கருத்தை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் – தேச துரோக வழக்கில் கைது செய்த மணிப்பூர் காவல்துறை

Credit: The Wire

மித்ஷாவின் இந்தி கருத்தை விமர்சித்ததற்காக தேசத் துரோக வழக்கில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சனோஜம் ஷியாம் சரண் சிங்கை  (சணோ) மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜகவின் இளைஞரணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மணிப்பூர் மாநிலத் தலைவர் எம். பரிஷ் ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில் சணோவை, ஏப்ரல் 11 தேதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 9 தேதி இம்பாக்ட் டிவியில் இந்தி: ஒருங்கிணைப்பா அல்லது திணிப்பா என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சணோ கைது செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

சணோ மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ (தேசத் துரோகம்), 295ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கம் அல்லது மத உணர்வுகளை புண்படுத்துதல்), 505 (குழப்பம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தி வயர் இணையதளத்திடம் பேசிய மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி சட்டப்பிரிவு துணைத்தலைவர் ரவி கான், “ஏப்ரல் 12 தேதி இரவு 8.30 மணிக்கு இம்பால் வெஸ்ட் பகுதியில் உள்ள நீதிபதி முன்பு சணோ ஆஜர்படுத்தப்பட்டார். ஒன்றரை மணி நேரமாக காவல்துறையின் வாதங்களை கேட்ட நீதிபதி, இரவு 10 மணிக்கு சணோவிற்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 27 தேதி சணோ நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக ரவி கான் தெரிவித்துள்ளார்.

Source: The Wire

தமிழ் Vs இந்தி 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்