மணிப்பூர் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகளை (ஐஎம்எஃப்எல்) மீண்டும் மாநில அரசு திறக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்பிரவரி 24), அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையின்போது பேசியுள்ள முதலமைச்சர், “கொடிய நாட்டு மதுபானங்களை குடிப்பதால் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். மக்களைக் காப்பாற்றுவதற்காக மாநில அரசு ஐஎம்எஃப்எல் விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்கும்” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இப்பேச்சிற்கு, மது மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பான போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு எதிரான கூட்டணி (சிஏடிஏ) உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து போராட்டக் குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1991ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வெளிநாட்டு மதுபானக் கடைகளையும் புரட்சிகர மக்கள் முன்னணி மூடியது.
17 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய மாநிலத்திற்கு 63 மதுபானக் கடைகளும் மூன்று மதுபானக் கிடங்குகளும் அப்போதைய காலக்கட்டத்தில் இருந்தன என்றும் சாலையோர கடைகளில்கூட அக்கடைகளில் விற்பனைச் செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் வெளிப்படையாக விற்கப்பட்டன என்றும் தி இந்து இது குறித்த செய்தியில் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் பிப்பிரவரி 27ஆம் தேதி மற்றும் மார்ச் 3ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.