Aran Sei

மணிப்பூரில் சமூக செயற்பாட்டாளர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கு – காவல்துறை நடவடிக்கை எடுக்காததற்கு மன்னிப்பு கோரிய முதலமைச்சர்

ணிப்பூரில் சமூக செயல்பாட்டாளர் அதுவான் அபோன்மாய், கடத்தி கொல்லப்பட்டதில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததற்கு அம்மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரேன், “அபோன்மாய் இழுத்து செல்லப்பட்டு காத்திருக்கும் ஜீப்பில் கட்டி வைக்கப்பட்டபோது காவல்துறையினர் பார்த்துள்ளனர். காவல்துறையினரின் மன உறுதி இந்த அளிவிற்கு தாழ்ந்துவிட்டது ஆச்சரியமாக உள்ளது. ஒரு உயிரைக் காப்பாற்றுவது காவல்துறையின் கடமையாகும்” என பேசியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

கடமை தவறி செயல்பட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 16 பேரை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தீவிரவாதிகள் பங்கு உள்ளதா என்பது குறித்து ஆராய ஒரு காவல்துறை தலைவர் மற்றும் இரண்டு காவல்துறை துணைத் தலைவர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை காவல்துறையினருக்கும் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தால், தேசிய புலனாய்வு முகமை விசாரணை கோரப்படும். உள்துறையை நிர்வகிக்கும் அமைச்சர் மற்றும் அரசின் தலைவர் என்ற முறையில், மக்களுக்காக பணியாற்றிய ஒரு மனிதரைக் கோழைத்தனமாக கொன்ற நடவடிக்கைக்காக அவரின் குடும்பம் மற்றும் பொது மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” பிரேன் தெரிவித்துள்ளார்.

காற்றுமாசினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த டபில்யூ.ஹச்.ஒ

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்