Aran Sei

மணிப்பூர்: வேட்பாளர்கள் பட்டியலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் – தலைமை அலுவலகத்தில் துணை இராணுவம் குவிப்பு

ங்களுடைய தலைவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பல பகுதிகளில் பாஜகவின் கொடிகள், சுவரொட்டிகளை எரித்துள்ள அக்கட்சி தொண்டர்கள், பாஜக கட்சியின் அலுவலகங்களை மூட வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் என்.பிரன் சிங் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்துள்ளதோடு, பாஜகவிற்கு எதிராக முழக்கங்களையும் பாஜக கட்சியினர் எழுப்பியுள்ளனர்.

காக்சிங் மற்றும் சாகோல்பந்த் உள்ளிட்ட சில தொகுதிகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அத்தோடு, மாநில தலைநகர் இம்பாலிலும் பாஜக தொண்டர்களின் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள் இம்பால் பகுதி முழுவதிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

பாஜகவின் மாநிலத் தலைவர் சாரதா தேவி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு வாரமாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏராளமான காவல்துறை கமாண்டோக்களும், துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட தன்னாட்சி கவுன்சில் மசோதா – மணிப்பூர் பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்

பாஜகவின் மணிப்பூர் தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பூபேந்தர் யாதவ், “பாஜகவில் பல ஆண்டுகளாக உள்ளவர்களுக்குதான் வாய்ப்பளித்துள்ளோம்” என்று கூறினாலும், “இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது” என்று தொண்டர்கள் அவர்மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வாங்கே தொகுதியில் போட்டியிடும் தங்கம் அருண்குமார் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸும் தேசிய மக்கள் கட்சியும் தெரிவித்துள்ளன.

‘மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்க’ – இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பின்னர் பேசிய பூபேந்தர் யாதவ், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மணிப்பூரில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தற்போது, மணிப்பூர் முதலமைச்சராக என்.பிரன் சிங் பதவி வகித்து வருகிறார்.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் பிப்பிரவரி 27ஆம் தேதி மற்றும் மார்ச் 3ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்