Aran Sei

கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம்

டைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதியைக் கட்டாயமாக்கும் மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்த மசோதாவில், “கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலைநேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுவதன் விளைவாக பல்வகையான உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம்” என்று கருதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்