Aran Sei

எம்.பி மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டிய உ.பி பெண் – உச்சநீதிமன்றத்தின் முன் தீக்குளித்த அவலம்

ச்சநீதிமன்றத்தின் முன்பு ஆணும், பெண்ணும் தங்களுக்கு தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆண் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 16 அன்று உத்தரபிரதேச மாநிலம்  காசியாப்பூர் பகுதியைச் சேர்ந்த  ஆணும்,பெண்ணும்   தீ  வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இந்நிலையில்,  இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 65 விழுக்காடு தீக்காயங்களுக்கு உள்ளான ஆண் உயிரிழந்துள்ளார்.

இதேவேளையில், 85 விழுக்காடு தீக்காயங்களுடன் அந்த பெண்  டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தற்கொலை முயற்சிக்கு முன்னர் அவர்கள் வெளியிட்டிருந்த முகநூல் நேரலையில், அந்த பெண் அவரது  அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவர்   கடந்த  2௦19 ஆம் ஆண்டு  உத்தரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பி.எஸ்.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய்யால் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும்,  காவல்துறையினர்  நாடாளுமன்ற உறுப்பினருக்கு உதவி வருவதாகவும் முகநூல் நேரலையில் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டின்  அடிப்படையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றக் காவலில் உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அந்தப் பெண் அவரது உயிருக்கு அபாயம் நிலவுகிறது எனக்கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமெனக் கோரியிருந்தார்.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் அளித்தப் மோசடி  புகாரின் பெயரில் கீழமை நீதிமன்றம்  அந்தப் பெண்மீது  பிணை வரயிலாதப் பிரிவின் கீழ் பிடியாணை பிறப்பித்திந்தது.

source: தி வயர்

தொடர்புடைய பதிவுகள்:

வால்மீகியோடு தாலிபான்களை ஒப்பிட்ட கவிஞர் – சாகித்ய அகாடமி விருது பெற்றவர் மீது வழக்குப்பதிவு

பெட்ரோல் விலை குறைவாக வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள் – மத்திய பிரதேச பாஜக தலைவர் கருத்து

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 935 கோடி – தமிழ்நாடு முதலிடம்

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்