Aran Sei

பர்தா அணியக்கூடாதென பெண்களை மிரட்டிய முதியவர்: கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறை

பிப்பிரவரி 18 அன்று மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் பர்தா அணிந்து வந்த தாய் மற்றும் மகளை பர்தா அணியக் கூடாது என்று தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த முதியவர்மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மை நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடை – கர்நாடக அரசின் உத்தரவை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதை ஒட்டி அங்கு தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகிறது.

நேற்று (பிப்பிரவரி19 ), தமிழ்நாட்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேலூர் வாக்குப்பதிவு மையத்தில் பாஜக பூத் ஏஜென்ட் இஸ்லாமியப் பெண்களை ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த பூத் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்