Aran Sei

தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்கு மீண்டும் கொரானா: எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மெய்ப்பிக்கிறதா கொரோனா மருந்து.

குஜராத் மாநிலத்தில், கொரோனா தடுப்பூசிய இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காந்திநகரின் தேகா தாலுகாவில் சுகாதார அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் ஜனவரி 16 மற்றும் பிப்ரவரி 15 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்குப் பிப்ரவரி 20 தேதி கொரோனா தொற்று இருப்பபது உறுதியானதாக, காந்திநகர் மாவட்ட, முதன்மை சுகாதார அதிகாரி, மருத்துவர் எம்.எச்.சோலாங்கி கூறியுள்ளார்.

பீமா கோரேகான் வழக்கு: மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார் கவிஞர் வரவர ராவ்

”அவருக்கு அறிகுறிகள் லேசாக இருப்பதால், வீட்டில் தனிமையில் உள்ளார். உடல்நிலை சீரானதை அடுத்து திங்கள் அன்று பணிக்குத் திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்” என சோலங்கி தெரிவித்துள்ளார்.

ஒருவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டபிறகு அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 45 நாட்கள்வரை ஆகலாம் என மருத்துவர் கூறியுள்ளார்.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும், முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது ஆகியவை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சோலங்கி தெரிவித்துள்ளார்.

மார்ச் 5 ஆம் தேதி நிலவரப்படி, குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் 2,72,240 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 4,413 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க் கட்சிகள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் போடப்படும் தடுப்புசிகள் சரியாக சோதனைக்கு உள்ளாக்கபடவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்