Aran Sei

விவசாயிகள் போராட்டத்தால் மனமுடைந்து சென்னையில் ஒருவர் தற்கொலை – விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கடிதம்

2020 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.

கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கினர். பின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கரம் நீண்டது.

ராமர் கோவில் கட்டுவதை சகித்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் – யோகி ஆதித்யனாத்

இதுவரை, பேராடும் விவசாயிகளுடன் எட்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மத்திய அரசு, அவர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து, சென்னையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் கடைசி கடிதத்தை, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் ”நான் இந்த முடிவை எடுத்ததற்கு சொந்த காரணம் எதுவும் இல்லை, என்னுடைய வேதனை எல்லாம் விவசாயிகளின் நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எப்பொழுதும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. விவசாயிகள் பலமுறை வறட்சியாலும்….. கஷ்டங்களையும் குழப்பங்களையும் சந்தித்து இருக்கிறார்கள். கடன் வாங்கி கடனைக் கொடுக்க முடியாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே 60 சதவீத நிலங்களை அழித்து விட்ட ரியல் எஸ்டேட், விவசாய நிலங்களையும் கூறுபோட்டு விற்க பார்க்கிறது.” என்று எழுதப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்: தனிச்சிறப்பானதாக்கும் நான்கு காரணிகள்

மேலும், ”கண்டிப்பாக இதற்கு ஒரு தீர்வு விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்கும். இந்தச் சட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள் என்று 90சதவீதம் பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 10 சதவீதம் மக்கள்தான் பாதிப்பு இல்லை என்று சொல்கிறார்கள். இதில் என்ன பாதிப்பு இருக்கிறது என்று விவரங்களைச் சொன்னால், மீதி மக்கள் புரிந்து கொள்வார்கள். தயவுசெய்து விவசாயிகளை போற்றுவோம், அவர்களை தெய்வமாக வணங்குவோம்” என்று குறிப்பிடபட்டுள்ளது.

”இந்தச் சட்டத்தை வாபஸ் வாங்குவதால் அரசுக்கு நஷ்டம் இல்லை. முதலாளிகளுக்கும் நஷ்டம் இல்லை விவசாயிகளுக்கும் நஷ்டம் இல்லை. அதனால் முன்பு இருந்தவை நடைமுறையில் இருப்பதில் தவறேதும் இல்லையே. என் மனதில் பட்டதை இந்த கடிதத்தின் மூலமாக தெரிவிக்கிறேன். இதனால் யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று  பெருமாள் தன்னுடைய கடைசி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அன்று பிரிட்டிஷ் இன்று மோடி : சத்யாகிரகத்தைத் தொடங்கிய விவசாயிகள் – ராகுல் காந்தி

தற்கொலை செய்து கொண்ட பெருமாளின் புகைப்படத்தையும் கடிதத்தையும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில பகிர்ந்துள்ள திருமாவளவன் ”டெல்லியில் வேளாண்  சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த பெருமாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன். உழைக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத மோடி அரசு, பெருமாளின் சாவுக்கா கவலைப்படப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்