Aran Sei

கொரோனா தடுப்பூசிகளுடன் மும்பையில் பிடிபட்ட இளைஞர் – கள்ளச்சந்தையில் விற்பனையா என காவல்துறையினர் விசாரணை

கொரோன தடுப்பு மருந்தான ரெம்தேசிவிரின் 12 தடுப்பூசிகளுடன், 22 வயது இளைஞர் பிடிபட்டிருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பையின் கிழக்கு அந்தேரி பகுதியில் குப்பிகளுடன் சர்ஃபராஸ் உசேன் என்ற இளைஞரைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை மாலை பிடித்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை சர்ஃபராஸ் கள்ளசந்தையில் விற்பதாக குற்றப்பரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவரைத் தேடி பிடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறையுங்கள்’ – மத்திய அரசிடம் சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தல்

மேலும், சர்ஃபராஸிடம் நடத்திய சோதனையில் ரெம்தேசிவிர்ரின் 12 தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசிகளை அவர் யாருக்கு விற்க கொண்டு சென்றார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக, ரெம்தேசிவிர் ஊசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்திற்கு ரூ. 1,100 முதல் 1, 400 வரை விலை நிர்ணயித்துள்ள மகாராஷ்டிரா அரசு, மருந்தைப் பதுக்கிவைப்பதற்கும் மற்றும் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுவதற்கும் தடை விதித்துள்ளது.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்