Aran Sei

’வகுப்புவாத கலவரத்தில் ஈடுபட்டாரென குற்றஞ்சாட்டப்பட்ட யோகேஷ் ராஜ்’ – உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி

த்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் 2018 ஆம் ஆண்டு காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் உயிரிழக்கவும்  வகுப்புவாத கலவரத்திற்கு காரணமாக  என்று குற்றம்சாட்டப்பட்டவர் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கலவரத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 2019 ஆம் ஆண்டு பிணையில் வந்த யோகேஷ் ராஜ், புலந்த்ஷஹர் பஞ்சாயத்து 5-ம் வார்டிற்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

“கடந்த காலத்தில், நான் பல சமூக சேவை அமைப்புகளுடன் தொடர்புடையவன். அரசியல் அதிகாரத்தால் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய பல பிரச்சினைகள் உள்ளன. ஊனமுற்றோர், விதவைகள் மற்றும் விவசாயிகள் நலனும் இதில் அடங்கும். என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என ராஜ் கூறியுள்ளார்.

பிஎம் கேர்ஸிற்கு நிதி அளிப்பதாக உறுதியளித்த ஆஸ்திரேலிய வீரர்: 37 லட்சத்தை யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார்

வன்முறையில் தனது பங்குகுறித்து பேசிய ராஜ், “வன்முறைக்குத் தான் என்மீது குற்றம்சாட்டப்பட்டது, கொலைக்கு அல்ல. கலவரத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு என் அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, வன்முறை ஏற்படுவதற்கு முன்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பலமுறை ராஜ் தொலைபேசி அழைப்புகளைச் செய்திருக்கிறார்.

இந்தியாவில் ஃபைசர் தடுப்பு மருந்து – அனுமதிக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆல்பர்ட் போர்லா தகவல்

டிசம்பர் 28, 2018 அன்று, மேற்கு உத்தரப் பிரதேசத்தின் கரும்புப் அதிகம் பயிரிடப்படும் பகுதியில் உள்ள புலந்த்ஷஹர் என்ற நகரத்தில் பசுவதை சம்பவத்திற்கு எதிராக ஒரு கும்பல் கூடி, பின்னர் வன்முறையாக மாறியது.

கைது செய்யப்பட்ட பிற குற்றவாளிகளைப் போலவே, ராஜும்  வன்முறையின்போது பஜ்ரங் தள் உறுப்பினராக இருந்தார். காவல்துறை ஆய்வாளர் சிங் கொல்லப்பட்டதில் சந்தேகப்படும் முக்கிய நபராக ராஜ்  இருக்கிறார் என்று மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். பின்னர், முக்கிய குற்றவாளி பிரசாந்த் நாட் என்றும், ஆனால் ராஜ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் என்றும் அவர்கள் கூறியுள்ளர்.

அறுவடைக்கு பிறகு டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் விவசாயிகள் – கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 80 பேரில் அவரும் ஒருவர். அதில் 27 பேர் பெயரிடப்பட்டவர்கள் மற்றும் மற்றவர்கள் பெயரிடப்படாதவர்கள். இருப்பினும், தி டிரிப்யூன்பத்திரிகையின் படி, ராஜ் யின்  பெயர் பின்னர் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது.

ராஜ் இனி இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை என்று பஜ்ரங் தள் கூறியுள்ளது.

Source : TheWire.in

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்