Aran Sei

தேர்தல் முடிவதற்குள் மம்தா பானர்ஜி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குவார் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேச்சு

மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் முடிவுதற்குள் மம்தா பானர்ஜி “ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவார் என்று கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு வங்கத்தின், கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற பேரணியில், அமித் ஷா இவ்வாறு கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியிலிருந்து மாநிலத்தில் ”ஜெய் ஸ்ரீராம் முழக்க பிரச்னை” முக்கியப்புள்ளியாக இருப்பதாகவும், இந்தியாவில் ”ஜெய் ஸ்ரீராம்” முழங்கப்படவில்லை என்றால், பாகிஸ்தானில் எழுப்பபடுமா? என அமித் ஷா கேள்வி எழுப்பியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை –  ட்விட்டர் நிறுவனத்திற்கு மறைமுக எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், மோடியின் வளர்ச்சி மாடலுக்கும், மம்தா பானர்ஜியின் அழிவு மாடலுக்கும் இடையில் போட்டி இருக்கும், என கூறியுள்ள அமித் ஷா ”ஜெய் ஸ்ரீராம்” முழங்கப்படும்போது ஆத்திரமடையும் மம்தா பானர்ஜி, தேர்தல் முடிவதற்குள் அவரே தன் வாயால் அதை சொல்வார் என கூறியுள்ளதாகவும் என்டிடிவி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில், ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசிய அரசு விழாவில், மம்தா மேடைக்கு வருமபோது, பாஜக தொண்டர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று  முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துவிட்டார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்