Aran Sei

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவது மோடியின் ஆலோசனையா? – மம்தா பானர்ஜி கேள்வி

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என்பது மோடி, அமித் ஷாவின் ஆலோனையா? என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளதாக என்டிடிவி செய்தி  வெளியிட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் நேற்று (பிப்ரவரி 26) மாலை அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபறும் என்று அறிவிக்கப்பட்டது. 5 மாநில தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் வன்முறை நடைபெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாகவும், 2016 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்கள் கூட, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’

இது தொடர்பாக பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ”நாங்கள் பல காரணிகளில் சட்டம் ஒழுங்கை பற்றி மதிப்பீட்டை கொண்டிருக்கிறோம். கடந்த முறை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று இருக்கும் நிலையில், எட்டு கட்டங்கள் என்பது ஒரு பெரிய விசயமல்ல” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் அட்டவனையை பாஜக முடிவு செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையிலான தொகுதிகள் கொண்ட மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்குபதிவு நடப்பதை சுட்டிக்காட்டியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

”நான் பாஜக வட்டாரங்களில் இருந்து தெரிந்து கொண்டேன். அவர்களின் பரிந்துரைகளும், தேர்தல் தேதியும் ஒத்துப்போகிறது. ஏன் ஓவ்வொரு கட்டத்திலும் பாதி மாவட்டத்திற்கான தேர்தல்? அசாமில் பிரச்சாரம் முடித்துவிட்டு இங்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்பதற்காக, இது மோடி மற்றும் அமித் ஷாவின் ஆலோசனையின் பெயரில் நடக்கிறதா? இது ஒரு விளையாட்டு. இதில் உங்களைத் தோற்கடித்து, பேய்களாக மாற்றுவோம். நாங்கள் இந்த மண்ணின் மக்கள்” என மம்தா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்

”நான் வங்காளத்தின் மகள். பாஜகவை விட எனக்கு இந்த மாநிலத்தை நன்றாக தெரியும். நாங்கள் எட்டு கட்டங்களிலும் வெற்றி பெறுவோம். உங்கள் சதித்திட்டம் அனைத்தையும் முறியடிப்பேன்… இந்த அவமானத்திற்கு வங்காள மக்கள் பதிலளிப்பார்கள்” என மம்தா பானர்ஜி கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்