Aran Sei

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மம்தா – சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம்.

நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து  டிஸ்சார்ஜ் ஆன மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது “நிஹோடோ பாகெர் தேகே அஹோடோ பாக் ஒன்க் பெஷி போயோங்கோர் (காயமடைந்த புலி, கொலை செய்யப்பட்ட புலியைவிட மிகவும் ஆபத்தானது)” என பேசியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, அங்கு மார்ச் 10-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நடைபெற்ற தாக்குதலால்,  காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி காயமடைந்து மருத்துவமனையில் – சதித்திட்டம் என்று குற்றச்சாட்டு

காலில் கட்டுடன் காளிகாட்டில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்த மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் மாயோ சாலை சந்திப்பில் உள்ள காந்தி சிலைக்குச் சென்றார். அங்கிருந்து நந்திகிராம் தியாகிகள் தினத்தன்று,  திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டார்.   2007-ம் ஆண்டு இதே நாளில் நந்திகிராமில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

பேரணியில் கலந்துகொண்ட மம்தா, “நான் காயம் அடைந்திருக்கிறேன், உடல் நலமின்றி இருக்கிறேன், ஆனால் எனது இலக்கு அப்படியே உள்ளது. என் உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. 15 நாட்கள் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் நான் தொடர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து வங்கத்தை சுற்றி வர இருக்கிறேன். நான் ஓய்வு எடுத்துக் கொண்டால் வங்காள மக்களை யார் சென்றடைவார்கள்?” என அவர் கூறினார்.

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

”உடைந்த காலுடன் நான் வங்காளம் முழுவதும் பயணம் செய்வேன். நாம் போட்டியிடுவோம். இந்த உடைந்த காலுடன் போட்டியிடுகிறேன்.  வங்கத்தைச் சுற்றி ஒரு சதி இருக்கிறது, நாம் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்.” என அவர் பேசினார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்