Aran Sei

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

credits : telegraph

பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயல்வதாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

முன்னதாக, மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான மோதல் தொடங்கியதாக டெலிகிராஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

`சிஏஏ விரைவில் அமலாகும்’ – பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தகவல்

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் பணியிலிருந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் வேலைகளுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநில அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ”இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது” என பதிவிட்டுள்ளார்.

மேலும், மாநில அரசை கட்டுப்படுத்த நினைக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்கம் அடிபணிய போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தேசிய செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சரத் பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார் என அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் டெல்லியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களால் விவாதிக்கப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேளிசெய்யும் திணாமுல்

மத்திய அரசைப் பயன்படுத்தி மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக  செயல் அபாயகரமானது  என்றும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசை சீர்குலைக்க முயல்வது ஜனநாயக விரோதமான போக்கு  என்றும் மாலிக் கண்டித்துள்ளார்.

“சூத்திரர்கள் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்” – பிரக்யா சிங் தாக்கூர்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்ப்பார்கள் என அவர் கூறியுள்ளனர். மேலும் பேசிய அவர், தேவை ஏற்பட்டால் சரத் பவார் கொல்கத்தாவுக்கு பயணம் செய்வார் எனவும் மாலிக் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் ஆட்சியில் மத்திய அரசு தலையிடுவதைக் கண்டித்து மேற்கு வங்க மக்களுக்காகவும், கூட்டாட்சி தத்துவத்தைக் காப்பாற்றுவதற்காகவும் குரல் கொடுத்த தலைவர்களுக்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்