Aran Sei

நந்திகிராமில் களமிறங்கும் மம்தா பானர்ஜி – உச்சகட்ட பரபரப்பில் மேற்கு வங்க அரசியல்

2007 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கம், நந்திகிராம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அறிவித்தது. ரசாயன மையம் அமைப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்த 10,000 ஏக்கர் விவசாய நிலங்களை இந்தோனேசியாவைச் சேர்ந்த சலிம் குழுமத்திற்கு ஒதுக்கியது.

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் மரணமடைந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மக்கள் போராட்டத்திற்குப் பிறகு இந்தத் திட்டம் அன்றைய மேற்கு வங்க அரசாங்கத்தால் கைவிடப்பட்டது. இந்தியாவையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், இந்தத் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பல போராட்டங்களை நடத்தியது. நந்திகிராமில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை மிகக் கடுமையாக எதிர்த்த மம்தா பானர்ஜி அதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள், தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

2007 ஆம் ஆண்டு நடந்த நந்திகிராம் துப்பாக்கிச்சூடு, 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எதிரொலித்தது. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ( 1977 முதல் 2011 வரை)  நடைபெற்ற இடதுசாரிகளின் ஆட்சியை, 2011 ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் முடிவுக்குக் கொண்டு வந்தது.

“அவரைக் கட்சியில் இணைத்தது, துரதிர்ஷ்டவசமானது” – திரிணாமுல் காங்கிரஸ்

நந்திகிராமில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனாவர்களுக்கு மம்தா அரசாங்கம், ஓய்வுதியம் வழங்கி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தன்னுடைய முதல் சட்டமன்ற வேட்பாளரை, நந்திகிராம் தொகுதியில் அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

‘பாஜக தோல்வியுற்றால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலதான் செய்வார்கள்’ – மம்தா பானர்ஜி

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜகவிற்கும் திரிணாமூல் காங்கிரசிற்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க பாஜகவிடம் இருந்து பணம் வாங்கும் ஓவைசி : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

நந்திகிராமில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ”நான் நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட்டால் எப்படியிருக்கும்? நான் நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட விருப்பம் இருப்பதாக சுபத்ரா பாக்‌ஷியிடம் (திரிணாமூல் காங்கிரசின் மாநில தலைவர்) கூற போகிறேன்” என்று அவர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் மம்தா பின் அணிதிரள வேண்டும் – திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு

நந்திகிராம் போராட்டத்தையும் இயக்கத்தையும் மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும்  இடம் அல்ல,  “எங்கள்  வீர வணக்கங்களை செலுத்தும் இடம்  கூட” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தான் தொடர்ந்து போட்டியிட்டு வரும் பவானிப்பூர் தொகுதியையும் கைவிட்டால் அந்தத் தொகுதியின் மக்கள் வருத்தப்படுவார்கள் என்று கூறியுள்ள அவர், ”நான் பவானிப்பூரை கைவிட மாட்டேன். அது எனது மனதுக்கு நெருக்கமான தொகுதி” என தெரிவித்துள்ளாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘இஸ்லாமிய பயங்கரவாதியான மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் தஞ்சம் புக வேண்டிவரும்’ – பாஜக

மம்தா பானர்ஜியின் அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேற்கு வங்கத்தில் இருக்கும் 294 தொகுதிகளிலும் மம்தாவே போட்டியிடுவார், என்று கூறியுள்ள பாஜக தலைவர் ஷாமிக் பட்டாச்சார்யா, திரிணாமூல் காங்கிரசில் இருக்கும் தலைவர்கள் மீது மம்தா பானர்ஜி நம்பிக்கை இல்லாமல் இருப்பதையே இது வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, இதுபோன்ற அறிவிப்புகள் மம்தா பானர்ஜி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

சமீபத்தில் திரிணாமூல் காங்கிரசிலிருந்து வெளியேறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த திரிணாமூல் காங்கிரசின் முக்கிய தலைவரான சுவேண்டு அதிகாரி, நந்திகிராமின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்க்கவே மம்தா, நந்திகிராம் தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தி இந்து குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்