Aran Sei

நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

மாநில சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் (மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை) நடைபெற இருக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயரை மம்தா பானர்ஜி இன்று (மார்ச் 5) வெளியிட்டார்.

மீதமிருக்கும் மூன்று தொகுதிகளிளும்  திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் (ஜி.ஜே.எம்) பிமல் குருங் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மாவட்டத்தின் 3 தொகுதிகளில் அவர்கள் போட்டியிட இருக்கின்றனர்.

மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவான யுடியூப் சேனல்கள் நீக்கம் –  ஃபேஸ்புக்கை தொடர்ந்து யுடியூப் நடவடிக்கை

அறிவிக்கப்பட்டிருக்கும் 291 வேட்பாளர்களின் 50 பெண்கள், 35 இஸ்லாமியர்கள், 79 பட்டியல் வகுப்பினர் மற்றும் 17 பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகக் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 23 நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.   80 வயதை கடந்தவர் யாரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடவில்லை என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

துபாய் இளவரசி உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை – ஐக்கிய நாடுகள் சபை

மம்தாவிற்கு பக்கபலமாக இருந்து, தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் சுவேந்து அதிகாரி, நந்தி கிராம் தொகுதியில் மம்தா போட்டியிட்டால் பாஜகவால்  தோற்கடிக்கப் படுவார் என்றும் துணிவிருந்தால் நந்திகிராமில் போட்டியிட வேண்டுமென்று சவால் விட்டிருந்தார். இந்தச் சவாலை ஏற்று, தனது சொந்த தொகுதியான பவானிபூருக்கு பதிலாக நந்திகிராமில் மம்தா போட்டியிருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் பட்டியலில் நடிகர்கள் சயோனி கோஷ் மற்றும் ஜூன் மாலியா, கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஹுமாயூன் கபிர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Source : PTI   

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்