Aran Sei

“பாஜக என்னை கொல்ல சதி திட்டம் தீட்டுகிறது” – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

credits : the indian express

ள்துறை அமைச்சர் அரசாங்கத்தை நடத்துகிறாரா அல்லது கொல்கத்தாவிலே அமர்ந்து கொண்டு, யாரை கைது செய்யலாம், யாரை தாக்கலாம், யார் மீது மத்திய அமைப்புகளை (வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை) ஏவலாம் எனச் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறாரா?” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கேள்வி எழுப்பியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம், மேற்கு வங்கத்தின், பங்குரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், சர்க்கர நாற்காலியுடன் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில், மேற்கு வங்கத்தின், ஜர்கிராம் மாவட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொள்ள இருந்த பொதுக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது, தொடர்பாக பேசிய மம்தா, மக்கள் கலந்து கொள்ளாததால் தான்  பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

வங்க மண்ணில் பாஜகவினர் சுதந்திரமாக நடமாட முடியாது – எச்சரிக்கை விடுத்துள்ள மம்தா

“ அமித்ஷா தன்னுடைய மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் ? உங்களுடைய அதிகார பலத்தின் மூலம் அனைத்தையும் முடக்கலாம் என நினைக்கிறீர்களா? உங்கள் கூட்டத்திற்கு உங்களால் ஆள் சேர்க்க முடியவில்லை அதனால் தான் உங்கள் அதிகார பலத்தை பயன்படுத்துகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

‘பாஜகவை வங்கத்தில் இருந்து துரத்த என் ஒரு கால் போதும்’ – சக்கர நாற்காலியில் பரப்புரை செய்த மம்தா பானர்ஜி

தொடர்ந்து பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அரசாங்கத்தை நடத்துவாரா அல்லது கொல்கத்தாவிலே அமர்ந்து கொண்டு, யாரை கைது செய்யலாம், யாரை தாக்கலாம், யார் மீது மத்திய அமைப்புகளை (வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை) ஏவலாம் என சதித்திட்டம் தீட்டி கொண்டிருக்கிறாரா? என்று கேள்வியெழுப்பியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மம்தா – சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம்.

”தொழிலதிபர்கள், உள்துறை செயலாளர் ஆகியோர் சோதனையிடப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அரசாங்க அதிகாரிகள் சோதனையிடப்படுவது எதனால்? தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் துன்புறுத்தப்படுகின்றனர்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்க விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவேன் – மம்தா பானர்ஜி

”தேர்தல் ஆணையத்தை இயக்குவது யார்? அமித்ஷா நீங்கள் தான் இயக்குகிறீர்களா? இந்தக் கேள்வி எனக்குள் எழுகிறது” என்று கூறிய மம்தா, “நமக்குச் சுதந்திரமான நேர்மையான தேர்தல் வேண்டும், ஆனால் இந்த அமித்ஷா யார்? தேர்தல் ஆணையத்தை வழிநடத்த அவர் யார்? தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் அவர் தலையிடுகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

மேலும், “தேர்தல் ஆணையம் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. எனது பாதுகாப்பு பொறுப்பாளரும் அகற்றப்பட்டுள்ளார். அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் என்னைக் கொல்ல விரும்புகிறார்களா?” என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேள்வியெழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்