Aran Sei

பரப்புரைக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் : ஒற்றையாளாக சக்கர நாற்காலியுடன் போராட்டத்தில் இறங்கிய மம்தா

credits : the hindu

ந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கையை  எதிர்ப்பதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டபேரவை தேர்தலானது, மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

மத்திய ஆயுதப் படைகளுக்கு எதிராக கருத்துக்கள் கூறியதாகவும் வாக்காளர்களிடையே மதரீதியிலான பிளவை ஏற்படுத்த முயன்றதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் 24 மணி நேரத்திற்கு தடை விதித்தது.

‘ஜனநாயக விரோதமாக, அரசியலமைப்பிற்கு எதிராக செயற்படும் தேர்தல் ஆணையம்’ – மம்தா தர்ணா போராட்டம்

இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 13) இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பிற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து, நாளை (ஏப்ரல் 13) மதியம் 12 மணியில் இருந்து கல்கத்தாவின் காந்தி மூர்த்தியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.” என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 13), காலை 11.30 மணியளவில் கல்கத்தா மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை பகுதிக்குத் தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி தன் தர்ணாவை தொடங்கியுள்ளார்.

அவருடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் பங்கெடுக்கவில்லை.

மம்தாவின் பரப்புரைக்கு தடை: சார்பின்மை மற்றும் நடுநிலையை கடைப்பிடிப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்திட வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

இதுகுறித்து பேசிய அக்கட்சியில் மூத்த தலைவர் ஒருவர், தர்ணா நடக்கும் களத்திற்கு கட்சிகாரர்கள் யாரையும் அவர் அனுமதிக்கவில்லை என்றும் அவர் மட்டும் இதில் பங்கேற்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான இடம் என்றும் இப்போராட்டத்திற்கு திரிணாமூல் கட்சி இன்னும் அனுமதி வாங்கவில்லை என்றும் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

பின்னர் பேசிய இராணுவ செய்திதொடர்பாளர், “இன்று காலை 9.40 மணியளவில், இப்போராட்டத்திற்கு அனுமதி கோரி, திரிணாமூல் கட்சியின் சார்பில் எங்களுக்கு மனு அளித்துள்ளனர். அதன் மீதான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்